நண்பர்களைத் தாக்கிய பல்கலை மாணவன்!!

 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த கொழும்புப் பல்கலைக்கழக 2ம் வருட மாணவன் ஒருவர் தனது நண்பர்கள் இருவரை கொட்டனால் தாக்கிய சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த மாணவன் வருட இறுதியில் யாழ் நகரில் உள்ள பிரபல விடுதியில் நடந்த ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது மிகப் பெரிய பியர் போத்தலுடன் செல்பி எடுத்தது அதனை நண்பர்கள் மட்டும் பார்க்கும் படி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த போட்டோவை அவரது நண்பன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்த நிலையில் மற்றுமொரு நண்பன் பியர் குடித்த மாணவனின் காதலியின் தந்தையின் பேஸ்புக்கிற்கு அந்த புகைபடத்தை Tag பண்ணியுள்ளார்.

இதனையடுத்து தனது தந்தையின் பேஸ்புக்கிற்கு தனது காதலன் பியருடன் நிற்கும் புகைப்படம் வந்துள்ளதை பார்த்து அதிர்ந்த காதலி இது தொடர்பாக காதலனிடம் கூறியுள்ளார்..

அதன் பின்னரே சம்பவத்திற்கு கொழும்பில் அறை ஒன்றில் தங்கியிருந்த நண்பர்கள் இருவரையும் காதலன் கொட்டனால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதில் தலை மற்றும் முகத்தில் காயங்களுக்கு உள்ளான இரு மாணவர்களும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கபப்ட்ட மாணவர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.