யாழ்.அரச அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

 


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்ட திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சர்வ மத தலைவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்ட பின்னர் இன்று (18.01.2023)காலை 10.20 மணிக்கு மாவட்ட செயலகத்தில்  உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 


இதன்போது அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் 

அவர்களுக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு,  மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மங்கள விளக்கேற்றலுடன் வரவேற்பளிக்கப்பட்டது. 


அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போது இப்பதவி தனக்கு கிடைத்தமை ஓர் வரப்பிரசாதம் என்றும் அரச உத்தியோகத்தர்கள் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்தி பொது மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவைகளை சரியான முறையில் வழங்குவதோடு

மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் ஒருங்கிணைந்தும் செயற்பட  வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 


மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் கீர்த்திக்கு வழிகாட்டியாக இருந்த முன்னாள் அரசாங்க அதிபர்களுக்கும், பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்


இதன் பின்னர் அரசாங்க அதிபர் மாவட்ட செயலகத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.