ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அமைச்சர் டக்ளஸுக்கு ஏற்பட்ட நிலை!!

 


தேசிய பொங்கலை கொண்டாடுவதற்காக  கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-01-2023) ஜனாதிபதி  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு மற்றும் ஏனைய கலந்துரையாடல்களை நிறைவு செய்து இறுதியாக பலாலி வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனின் (Vijayakala Maheswaran) இல்லத்திற்கும் விஜயம் மேற்கொண்டு கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


இவ்வாறான நிலையில், ஜனாதிபதி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு செல்லும் வேளை ஜனாதிபதியின் வாகனத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் (Douglas Devananda) ஒன்றாக பயணித்திருந்தார்.

விஐயகலா மகேஸ்வரனின் வீட்டு வாயில் வரை ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தில் வந்த டக்ளஸ் தேவானந்தா வீட்டுக்குள் நுழைய முடியாது தத்தளித்ததோடு ஜனாதிபதி, விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்குள் நுழைந்த பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கு முன்னாடி சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக தனியாக வீதியின் கரையில் நின்டு தனது வாகனத்திற்காக காத்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.