அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
நாட்டில் கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17-01-2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது.
பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட போனால் எதிர்காலத்தில் கடன் கிடைக்காது. ஒரு கொள்கையாக, பணம் செலுத்தாததற்காக பணம் அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது.
இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம்.
டிசம்பர் மாதம் எவ்வாறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை