கிளிநொச்சியில் இரண்டாகப் பிளந்தது தமிழரசு...

 



கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபை பின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள் முடிவெடுத்திருந்தனர் எனவும்,  


தமிழரசு கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப்பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழரசுகட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள் மொத்தமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தலை எதிர்கொள்வது கட்சியின் மாவட்ட தலைமையாகிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிர்கால அரசியலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.