கீரிமலை செல்லும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை மனவேதனை அளிக்கிறது,!


மாதகல் கடற்கரை கெபி லூர்து மாதா ஆலய திருவிழாவுக்காக இன்று {18} இரவு  பொன்னாலை - கிரிமலை பிரதான வீதி ஆலயத்திற்கு முன்பாக மூடப்பட்டுள்ளதால் கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு செல்கின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


வருடாந்தம் கிறிஸ்தவர்களின் மேற்படி ஆலய திருவிழா வீதியை மறித்தே செய்யப்படுவது வழமை.


ஆனால் இன்றைய தினம் சைவத் தமிழ் மக்களின் முக்கியமான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


வரலாற்று சிறப்புமிக்க ஐம்பெரும் ஈஸ்வரங்களில் ஒன்றாகிய நகுலேச்சரத்துக்கு சைவத்தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் செல்வார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.


அவ்வாறு இருந்தும் வீதி மறிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.


ஆலய நிர்வாகம் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்திருக்க வேண்டும். வீதியில் ஒரு பக்கமாக தமது திருவிழாவை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கமாக சைவப் பெருமக்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 


அதை விடுத்து வீதியை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு மக்களை திருப்பி அனுப்பியமை மன வேதனை அளிக்கின்றது.


மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஆரோக்கியமானதல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.


இனி ஒரு நாளில் இவ்வாறான நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.