வாழ்வாங்கு வாழும் கணவன்!!


 பருவங்கள் போனாலும்

பாசங்கள் தீராமல், 


உருவங்கள் மாறினாலும்

உணர்வுகள்  சோராமல், 


சருமங்கள் சுருங்கினாலும்

சலிப்புகள் பாராமல், 


கருமங்கள் கூடினாலும்

கண்டதையும் நாடாமல், 


எந்தத்

தருணங்கள் வந்தாலும் தன்

துணையை வாடாமல், 

தேவதையாய்ப் பார்ப்பவன் 


வாழ்வாங்கு வாழும் கணவன்❗❤

வாழ்க்கைத் துணைவிக்கு 

அவன் இறைவன்❗🙏


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.