சிங்கப்பூரில் தமிழர் ஒருவரின் !!

 


சிங்கப்பூரில் காதலை ஏற்க மறுத்த பெண் மீது 1.9 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கேட்டு தமிழர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


சிங்கப்பூரில் ட்ரோன் நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணியாற்றி வருகிறார் கெளஷிகன். இவரே தமது காதலை ஏற்க மறுத்த Nora Tan Shu Mei என்பவர் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தவர்.


மட்டுமின்றி, Nora Tan Shu Mei தமது காதலை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் தமது தொழிலையும் பாதித்ததாக அந்த புகார் மனுவில் கெளஷிகன் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், பதிலுக்கு Nora Tan Shu Mei என்பவரும் கெளஷிகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவரது குடியிருப்பை இழக்காமல் இருப்பதற்கான செலவை மீட்டெடுக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.மட்டுமின்றி கெளஷிகன் தமக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததாகவும், இவருக்கு அஞ்சி siren alarm sensor மற்றும் smart video doorbell ஆகியவையும் பொருத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், Nora Tan Shu Mei தமது வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்றார். இதனால், குறைந்தது 5 தொழில் முதலீடுகளை தாம் இழந்ததாகவும் கெளஷிகன் குறிப்பிட்டுள்ளார்.


இதனையடுத்து தொழிலில் ஏற்பட்ட இழப்பிற்காக சுமார் 750,000 பவுண்டுகள் இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும், அத்துடன் தமக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்காக 105,000 பவுண்டுகள் அளிக்க வேண்டும் எனவும் கெளஷிகன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், நீதிமன்றம் கெளஷிகனின் புகார் மனுவை ஏற்க மறுத்ததுடன், பெண் ஒருவரை காதளிக்க வலியுறுத்தி நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு பிப்ரவரி 9-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உயர் நீதிமன்றப் பட்டியல் கூறுகிறது.


சிங்கப்பூர் அரிமா சங்க உறுப்பினர்களான இருவரும் 2016ல் முதன்முறையாக சந்தித்துக் கொண்டதுடன், நண்பர்களாக மாறினர். ஆனால் நாளடைவில் கெளஷிகன் அவர் மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது.


இதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும், தாம் ஒரு நண்பராக மட்டுமே கருதுவதாகவும் Tan தெரிவித்துள்ளார். அத்துடன் கெளஷிகனுடன் பழகுவதையும் சந்திப்பதையும் அவர் குறைத்துக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் ஜூன் 2019 மற்றும் டிசம்பர் 2020ல், Tan தனக்கு எதிராக அவதூறாக நடந்து கொண்டதாக கெளஷிகன் குற்றம் சாட்டினார். தமக்கு எதிராக தவறான தகவல்களை அவர் பரப்பியதாகவும் கெளஷிகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மேலும், இனிமேலும் தம்மால் கெளஷிகனுடன் பேசவோ பழகவோ முடியாது என உறுதியாக தெரிவித்த நிலையில் தான் கெளஷிகன் இழப்பீட்டு கேட்டு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.