பொலிஸ் உத்தியோகஸ்த்தர் , மனைவி மற்றும் மைத்துனரின் அராஜகம் - குடும்பஸ்தர் பாதிப்பு!!

 


யாழில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானதாகp கூறப்படும் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. LLP l


நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரக கடமையாற்றும் நபர், தனது மைத்துனரை பயன்படுத்தி குடும்பஸ்தரை, கிளிநொச்சி - கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து காணி துப்புரவு செய்வதற்கென கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, பின்னர் வாகனம் ஒன்றில் மாற்றி அழைத்து சென்று தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் அழைத்து சென்று வான் ஒன்றில் ஏற்றி கட்டாயப்படுத்தி சாராயத்தை பருக்கி பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் சுயநினைவிழந்து வாய்க்கால் ஒன்றில் விழுந்து கிடந்ததாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்டவர், சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியும் மற்றுமொரு நபரும் இருந்தாகவும் அவர் கூறினார்.

பொழுது சாய்ந்த நிலையில் தன்னை திருநகர் வீதியை அண்மித்த பகுதியில் வானிலிருந்து தள்ளிவிட்டு சென்றதாகவும் கூறிய அவர் தன்னை தாக்க வேண்டாம் எனவும், கதறிய போதும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கண்டல் காயங்கள், நோவுகளுடன் விறைப்பும் காணப்படுவதுடன், காதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து, திருட்டு பொருட்களை எங்கு வைத்திருக்கிறாய்? என விசாரித்தே தன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது மைத்துனரும் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து மற்றுமொரு வீட்டினையும், வர்த்தக நிலையத்தினையும் முறைப்பாடு எதுவுமின்றி வீட்டுரிமையாளர்கள் இல்லாதவேளை தேடுதல் மேற்கொண்2ள்ளனர்.

அத்துடன், அங்கு இருந்த சிறுவர்களையும் அவர்கள் அச்சுறுத்தியதாக  கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில்   மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் உயர்பீடங்களிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.