பொலிஸார் வழிமறித்த காரை கைவிட்டு தப்பி ஓட்டம்


 யாழ்.தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினை வழிமறித்து சோதனையிட முயற்சித்தபோது காரில் இருந்தவர்கள் காரை பற்றை ஒன்றுக்குள் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 15ம் திகதி நாவற்குழி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கார் ஒன்றில் வந்த சிலர் கியூ ஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கும்படி கேட்டுள்ளனர். எனினும் அதற்கு மறுப்பு தொிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே தாக்குதலின் பின்னணியில் காரில் பயணித்தவர்கள் இருக்கலாம். என சந்தேகிக்கப்படும் நிலையில் காரின் இலக்க தகட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்,

மறவன்புலவு பகுதியில் அதே கார் பயணிப்பதை கண்டுபிடித்த பொலிஸார் அதனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனர். இந்நிலையில் காரில் பயணித்தவர்கள் காரை பற்றைக்குள் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.