போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது!

 


லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக ​நேற்று (25) மாலை நிந்தவூர் பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீம் ஆலோசனையில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன, பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால் சுமார் 50 க்கும் மேற்பட்ட லேகியம் போதைப்பொருட்னள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது கைதான 73 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உட்பட சான்று பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.