சமூக வலைத்தள விதிகள் பற்றி அறிந்து கொள்வோம்!!

  


சமூக வலைத்தளங்கள் நமது வாழ்வின் அங்கமாகி விட்டபிறகு அதில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.


மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஈமெயில் பற்றி முதலில் பார்ப்போம் 


1. எப்போது ஈமெயில் அனுப்பினாலும் 'சப்ஜெக்ட்' எனும் இடத்தில் நாம் எதைப்பற்றிய மெயில் அனுப்புகிறோம் என்று சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டும். அது மெயில் பெறுவோர் எளிதில் தேடிக் கண்டு பிடித்து படிக்க வசதியாக இருக்கும். 

2. நாம் அனுப்புவது அலுவலக நிமித்தம் என்றால் அலுவலக ஈமெயில் முகவரியை, நாம் அனுப்புவது சொந்த விஷயமாக என்றால் அந்த நபரின் சொந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்புவது மிக நல்லது. 

3. எப்போதுமே பதில் அனுப்பும் முன்பு ஒருமுறைக்கு இரு முறை யோசித்து விட்டு, எழுதியதை படித்து பார்த்து, முகவரி சரி பார்த்து, ஏதாவது இணைப்பு இருந்தால் அந்த போட்டோ அல்லது பைலை இணைந்திருப்பது உறுதி செய்து கொண்டு பிறகு மெயில் 'சென்ட்' பட்டனை அமுக்க வேண்டும். 

4. கூடுமானவரை மெயில் நிறைவில் நமது பெயர், நிறுவன பெயர், நமது பதவி, நமது நிறுவன வெப்சைட், நமது கைபேசி எண் இவற்றை குறிப்பிடுவது நல்லது 

5. அதே போல அலுவலக மெயில் என்றால் அதற்குரிய மரியாதை மெயில் எழுதும் மொழியில் இருக்க வேண்டும். மச்சான் மாமா என்றெல்லாம் எழுதி விடக் கூடாது 

6..மெயில் வரிகளில் தேவையற்ற ஆச்சரியக்குறி, கேள்விக்குறி இவை போட்டு விடக் கூடாது.

7. அனாவிசியமாக 'நகைச்சுவை' என்ற பெயரில் ஏதேனும் எழுதி யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது.

8. ரிப்ளை செய்யும் பொழுது CC என்று போட்டால் யாருக்கு இந்த மெயில் காபி செய்யப்பட வேண்டும், யாருக்கு இது தெரிய வேண்டாம் என்று அறிந்து பயன்படுத்த வேண்டும். BCC என்ற இடத்தில் நாம் இடும் மெயில் முகவரி நாம் யாருக்கு அனுப்புகிறோம் என்று முதலில் அனுப்பப் படுபவர்க்கு தெரியாது. 

9.கேப்பிடல் லெட்டர் பயன்படுத்த கூடாது. அதே போல நமது எழுத்தின் அளவு 10 முதல் 12 சைஸ் வரை இருக்கலாம். அதை விட சிறியதோ பெரியதோ நல்லதல்ல.


இப்போது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்' எனப்படும் முகநூல் பற்றி அறிவோம். :


1. அனாவசியமாக அரசியல் விமர்சனங்கள், அரசியல் நையாண்டி நக்கல்கள் கூடவே கூடாது. பிறரின் போஸ்டை பற்றி, அவர்களின் அறிவு பற்றி, அவர்களின் நேர்மை பற்றி நேரடியாக கேள்வி கேட்டு கமெண்ட் போடக்கூடாது.

2. எல்லாவற்றையும் குற்றம் சொல்லும் மனோபாவத்தை முகநூலில் தவிர்க்க வேண்டும். குதர்க்கமான படங்கள், விடியோக்கள் இவற்றை பதிவிட கூடாது. கையில் கிடைக்கும் தகவல்களை எல்லாம் 'ஷேர்' செய்யக்கூடாது 

3. சுய பிரதாபங்களை தவிர்த்தால் நல்லது. பிறருக்கு உங்கள் புதிய வணிகம், திடீர் வெற்றி இவற்றில் விருப்பம் குறைவு, எரிச்சல் அதிகம்.

4. நல்ல செய்தி (திருமணம், குழந்தை பிறப்பு, புதிய வேலை, பதவி உயர்வு, மரணம், பிறந்த நாள்) நண்பர்களுக்கு தெரிவித்து மகிழலாம்.

5. நாம் பிறரிடம் இருந்து பகிரும் ஒரு செய்தி பற்றிய உறுதித்தன்மை கண்டறிந்து பிறகு போஸ்ட் செய்யலாம்.

6. அடுத்தவரின் குழந்தை போட்டோ, குடும்ப போட்டோ அவர்கள் அனுமதி இன்றி போஸ்ட் செய்யக்கூடாது.

7. யாரேனும் ஒரு கெட்ட செய்தி போட்டிருந்தால், அதற்கு 'லைக்' பட்டன் அமுக்காது, வருத்தம் தெரிவித்து கமெண்ட் போடுங்கள் 

8. ஏதேனும் பரிதாபமான செய்தி என்றால், எளிமையாக அதற்கு வருத்தம் தெரிவியுங்கள்.


இப்போது மிக மிக முக்கியம் : வாட்ஸ் ஆப் குழுவில் எப்படி நடந்து கொள்ளுவது :


1. தனியான உரையாடல்களை குரூப்பில் தவிர்க்க வேண்டும் 

2. பிறரை கேலி செய்து, திட்டி, அதட்டி எந்த செய்தியையும் குரூப்பில் போடக்கூடாது.

3. குரூப்பில் போட்ட ஒரு செய்திக்கு இரண்டொரு நாட்கள் கழித்து பதில் கொடுத்தால், யாருக்குமே நாம் எதைப் பற்றி சொல்கிறோம் என்று தெரியாது. தேவையற்ற சிம்பல்கள் பயன்படுத்தக் கூடாது.

4. இரவு 11 மணிக்கு மேல், காலை 6 மணிக்கு முன்பு (அவசர செய்தி தவிர்த்து) குரூப்பில் போடக்கூடாது. அது பிறருக்கு தொந்தரவாக இருக்கும்.

5. நாம் சீரியஸ் பதில் சொல்லுகிறோமா அல்லது நக்கல் அடிக்கிறோமா என்று பிறர் யூகத்திற்கு விடக்கூடாது.

6. எவரையும் தனிப்பட்ட காயப்படுத்தும் மெசேஜ் குரூப்பில் போடக்கூடாது.

7. தனியான பதில் தர வேண்டும் என்பதை குரூப்பில் போடக்கூடாது.

8. எந்த ஒரு பதிலையும் 48 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும்.8. கேப்பிடல் லெட்டர் பயன்படுத்த கூடாது 

9. ஒரு நாளைக்கு பல முறை மெசேஜ் போடக்கூடாது. எல்லோர் போஸ்டிற்கும் நாம் பதில் போட வேண்டும் என்று அவசியம் இல்லை.

10. வதந்திகளை நிச்சயம் பகிரக்கூடாது.

11. அரசியல், மத ரீதியான - மனம் புண்படுத்தும் கமெண்ட் நிச்சயம் போடக்கூடாது.

12. சிலர் எந்த ஒரு விஷயத்திற்கும் பதில் போடாமல் இருக்கலாம். அதற்கு குரூப்பில் ஏலம் போட்டு பதில் கேட்க கூடாது 

13. எப்படியாவது பதில் வரவழைக்க சிலர் திரும்பத் திரும்ப அது பற்றியே பேசி பலரை மனம் கோணச் செய்வர்.

14. சிலர் உண்ணாமல், உறங்காமல் ஒரே காரியமாக போஸ்ட் போட்டுக் கொண்டு இருப்பர். குரூப் இருக்கும் மூட் பற்றி கவலைப் பட மாட்டார். 

15. சில கெட்ட செய்தி வந்திருக்கும். அதனை சற்றும் பாராது, ஒரு தமாஷ் வீடியோ போடுவார் சிலர். அதனால் மற்றவர் மனம் புண்படலாம்

16. தொடர்ந்து சிலர் அந்த குரூப்பில் இருக்கும் பலரை ஏதாவது கமெண்ட் போட்டு அவமானப்படுத்தி இன்பம் காணுவர். புரிந்து கொண்டு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளுவது நல்லது. 

17. குரூப்பில் இருக்கும் நபர்களை சமமாக நடத்துவது நல்லது. யாரும் மேலோர் கீழோர் என்று மட்டம் கிடையாது 


ஒரு குரூப்பில். இந்த எளிய விதிகளை கடைபிடித்து சமூக வலைத்தளங்களில் இன்பமாக இருப்போம். இன்பத்தை அளிப்போம்.




டாக்டர் பாலசாண்டில்யன் 

- மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.