15 ஆம் திகதி பொது வேலை நிறுத்தப் போராட்டம்!

 


எதிர்வரும் 15ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளன.

இதன்போது, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச, தனியார் மற்றும் தனியார் உள்ளிட்ட தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.