வடக்கின் போர் - நேற்றைய முடிவுகள்!!


 "வடக்கின் பெரும் போர்" என்று  வர்ணிக்கப்படும் 116 வது பெரும் துடுப்பாட்டப்போட்டி நேற்றைய தினம் யாழ்.  மத்திய கல்லூரி மைதானத்தில்  ஆரம்பமானது. 

இப்போட்டியில் யாழ்.  மத்திய கல்லூரி 297 ஓட்டங்களைப் பெற்றது.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 42 ஓட்டங்களை மட்டும் பெற்றுள்ளது. 

சென்ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் சபேசன் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்த நிலையில் யாழ் . மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடியது.


மத்திய கல்லூரிக்கு விதுசன், சிமில்ரன் ஆகியோர் ஆரம்பம் கொடுத்தனர். குறுகிய நேரத்தில் இந்த இணைப்பு முடிவுக்கு வந்தது.  சிமில்ரன் 7 ஓட்டங்களுடன் யோ. விதுசனின் பந்து வீச்சில் ஹிந்துசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

சஞ்சயன் இணைந்து  கொள்ள இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் விதுசனின் ஆட்டம் வேகமாகியது. அரைச்சதம் கடந்து அபாரமாக ஆடிய விதுசன்,  6 பௌன்றிகள், 5 சிக்ஸர்களுடன் 102 பந்துகளுடன் 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். சஞ்சயனுடன் இணைந்த போல் இறேம் தயாளன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். 


இதனிடையே 6 பௌன்றிகளுடன் 84 பந்துகளில் 42 ஓட்டங்களைச் சேர்த்த சஞ்சயன் ஆட்டமிழந்தார்.  

நியூட்டன் 0 , கஜன் 5, சயந்தன் 11, அபிலாஷ்  15, அனுஷாந் 27 என விக்கெட் பறிபோனது.


மறுமுனையில் அஜய் 77 பந்துகளில்  6 பௌன்றிகள் 2 சிக்ஸர்களுடன்  74 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். 


மத்திய கல்லூரி அணியினர் 66.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ரண்கள் பெற்றது. 

 சென்ஜோன்ஸ் அணியின் பந்துவீச்சில் விதுசன்  4 விக்கெட்டுகளையும் அபிஷன்3 விக்கெட்டுகளையும்  கஜகர்ணன் 2 விக்கெட்டுகளையும் வசப்படுத்தினர்.

சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு நேசகுமார் ஜெஷீல்,அண்டர்சன் சர்ச்சில் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

சர்ச்சின் 6 ஓட்டங்களுடன் வெளியேற கிந்துசன் 1 பௌன்றி 1 சிக்ஸருடன் 11  ஓட்டங்கள் பெற்று  ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த ஜனத்தன் ஓட்டமெதுவும் இன்றி  வெளியேறினார். 


நேற்று 17 ஓவர்களுடன் 3 விக்கெட் இழப்பிற்கு 43 ஓட்டங்களைப் பெற்றது. ஜெசில் 16 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் சபேசன்  9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

  

 மத்திய கல்லூரியின் பந்து வீச்சில் அனுஷாந் 2 விக்கெட்டுகளையும் நியூட்டன் 1 விக்கெட்டையும் பெற்றனர்.

இன்று 10 மணிக்கு போட்டி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.



 





 


 



   

 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.