புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!

 


அவுஸ்ரேலியாவில் வசித்துவரும்  கமலநாதன் கிரிதர்சன் என்பவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சியாக ஆடுகள் வழங்கியுள்ளார்.


யுத்தத்தில் தொடைப்பகுதியுடன் கால் துண்டிக்கப்பட்ட ஒருவருக்கும் யுத்தத்தில் உடன்பிறப்புகளை இழந்து, பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் ஒருவருக்குமாக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க   இந்த உதவிகளை வழங்கியுள்ளார். 

.

கோபிமனோகரன் வேலாயுதப்பிள்ளை என்பவரது முயற்சியின் மூலமே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் இருவருக்கும் தமது  நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.


 சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையில் இவர்கள் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டினைத்  தெரிவித்துள்ளனர்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.