தேசிய கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றில் அரையிறுக்கு தகுதி பெற்றது யாழ் மத்திய கல்லூரி!! .

 


அகில இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சபை நடாத்தும் 2022/2023 க்கான  கிரிக்கெட் டெஸ்ட்  போட்டித்தொடரின் 19 வயதின் கீழ் கிரிக்கெட்

பிரிவு 3 A க்கான  பிரிவில் காலிறுதி போட்டியில் 

யாழ் மத்திய கல்லூரி எதிர் புத்தள ஆனந்த கல்லூரிகளுக்கிடையிலான  2 நாள் போட்டிகள் நேற்றும் முந்தினமும் இடம்பெற்றது .

1ம் நாள் முடிவில் 

யாழ் மத்திய கல்லூரி 193 ஓட்டங்கள் 59 ஓவர்களில் பெற 

பதிலுக்கு துடுப்பாடிய ஆனந்த கல்லூரி

82 ஓட்டங்களுக்கு 7 இலக்குகள்  விழ ஆட்டம் நேற்றும் தொடர்ந்தது . தொடந்து துடுப்பாடிய ஆனந்த கல்லூரி 93 ஒட்டஙகளுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்தது  யாழ் மத்திய கல்லூரி ஓரு இனிங்சால் வெற்றி பெற்றது .அத்துடன் இந்த போட்டித்தொடரில் அரையிறுதி  ஆட்டத்தில் விளையாடும் தகுதியை யாழ் மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது .இந்த அரையிறுதி ஆட்டத்தில்  எதிர் வரும் 3,4ஆம் திகதிகளில் கொழும்பு தேஸ்ரன் கல்லூரி மைதானத்தில் கோமாகம மகிந்த ராஜ பக்ச கல்லூரியை எதிரத்து யாழ் மத்திய கல்லூரி விளையாடவுள்ளது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.