கலாநிதி. ஆறுதிருமுருகன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

 


சமீபத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிகப்பட்டமை தொடர்பில் மிகுந்த வேதனை அடைவதாக அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் (aruthirumurugan) தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆறுதிருமுருகன்,

சைவ மக்களுக்கு சமீபக் காலமாக தொடர்ச்சியாக அதிர்ச்சியான செய்திகள் வந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கமைய, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மாத்திரமின்றி, கீரிமலையில் இருந்த ஆதிச் சிவன் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சைவ ஆலயங்களை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாக பெளத்த அடையாளங்களாக மாற்றி வருவதாகவும் ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.


முழு சைவ மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.