நாளை நவமி - செய்யக்கூடியவையும் கூடாதவையும்!!

 


ஏகபத்தினி விரதனான ராம பிரானின் பெயரைக் கேட்டாலே போதும் பக்தர்களுக்கு அவரின் எல்லையற்ற நற்பண்புகள் நினைவுக்கு வருகின்றன.

அதனால் தான் எல்லோரும் ராமர் - சீதா போல தம்பதிகள் வாழ்வேண்டும் என வாழ்த்துவார்கள்.

பல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ராமநவமியில் என்ன விடயங்கள் செய்யவேண்டும், எவற்றினை செய்யக்கூடாது என முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டு ராம நவமி விழா, நாளை (மார்ச் 30) வருகிறது.

இது விஷ்ணு பகவான் ராமராக அவதாரம் எடுத்த நாள் என புராணங்கள் கூறுகின்றன.

இந்த நல்ல நாளில், சந்திரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்கிறது. இந்த நட்சத்திரம் தான் செல்வம், புகழ், அங்கீகாரம், தாயின் அன்பு ஆகியவற்றைக் குறிக்கும்.


இந்த நாளில் ராமரை வணங்கி, அவருடைய மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் இழந்த செல்வம், அந்தஸ்து, அங்கீகாரத்தை மீண்டும் பெற முடியும்.

ஆனால் ராம நவமியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஸ்ரீஇராமரை வணங்குங்கள்.

இந்த நாளில் விரதம் இருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


இந்த விரதம் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தந்து, உங்கள் பாவங்களை அழிக்கிறது.

விரதத்தின் போது நிறைய தண்ணீர் குடிக்கலாம். அயோத்தியில் உள்ள சரயு நதியில் புனித நீராடுவது கடந்த கால, நிகழ்கால பாவங்களை அழிக்கும் என்பார்கள்.

முடிந்தவர்கள் சென்று நீராடலாம். ஸ்ரீராமரின் ஸ்தோத்திரத்தை ஒவ்வொன்றாக பாராயணம் செய்யவும்.

முடியாதவர்கள் ராம நாமத்தை உச்சரிக்கவும். இந்த நாளில் ராம கீர்த்தனைகள், பஜனைகள், ஸ்தோத்திரங்களைத் தொடர்ந்து சொல்வது சிறந்தது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.