கவிதை என்றொரு ஆவணக் காப்பகம் ..!

 


அடிக்கடி வந்து போகும்

ஆவணக் காப்பகம் நீ ..

இதழ்கள் வாசிக்கப்படுமிடத்தில் 

நான் நேசிக்கும் வாசகம் நீ ..

அபிநயம் பிடிக்கும்

உன் மென் விரல்கள்

நவரசம் புரியும்

முக பாவங்கள் ..

இன்னிசை நாதமென்

ஒலிக்கும் சலங்கை ..

காப்பகத்தின்

காப்புரிமை பெற்ற 

அனைத்து இதழ்களில்

சிறந்தவை 

உன் பரத சாதகங்களின் 

சீர் மிகு குறிப்புகள்..

கசக்கி எறிந்த 

காகித பொட்டலம்

மெல்ல மெல்ல 

விரிந்து விடுபடுவது போல..

அணுஅணுவாய்

உனை ரசிக்கிறேன் ..

கிழித்து போட்ட பக்கங்களும்

உயிர் பெறுகிறது 

உன் அபிராதமான கலையில்..

ஓரே நேரத்தில்

ஏகாந்த இரவு போன்ற

எனக்கு சுவாசமும் 

எறியப்பட்ட காகிதத்திற்கும் 

கிடைக்கின்றன.

அர்த்தமுள்ள இந்துமதமாய்

ஒரு சாசனம் ,.

காப்பகத்தில்

களவாடி போக படாதே 

மன திறந்த புத்தகமும் நீ ..

வாசித்து நிறுத்துமிடத்தில்

ஞாபகார்த்தமாக

பக்கத்தில் வைக்கப்படும்

ஒற்றை ரோஜாப் பூவும் நீ .

பலிக்காது என தெரிந்தும்

பகல் கனவில் தோன்றிய

கற்பனை காட்டிற்கு வெளியே ..

விலகாது ஒரு உறவாக 

இப் பெருங்கொண்ட காப்பகத்தில்

உன் கலையும் என் இலக்கணமும்

இணையட்டும் ..!

               **************************

செந்தில் ஸ்ரீகுமரன்

மயில்கள் ஆடும் துறை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.