கொழும்புக்கு வரும் மக்களின் வசதிக்காக 15முதல் பஸ்கள் சேவையில்!
புத்தாண்டு சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களின் வசதிக்காக இன்று (15) முதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச குறிப்பிட்டள்ளார்.
கருத்துகள் இல்லை