சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம்!


சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை (12) சந்தித்தார்.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பாராட்டிய இராஜாங்க அமைச்சர், தற்போது அதன் சேவைகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடினார்.

அத்துடன் புதிதாக நியமனம் பெற்றுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய இராஜாங்க அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்த முதல் உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

ரியர் அட்மிரல் சுதர்ஷன தனது நியமனக் கடிதத்தை அண்மையில் (ஏப்ரல் 04) பெற்றுக்கொண்டார்.

இவர் இலங்கை கடற்படையில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.