பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!


உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக உலக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.உலக வானிலை ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.*


*நிலத்திலும், கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.*


*ஒவ்வொரு கண்டமும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூறு ஆண்டுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வகம் அறிக்கை வெளியிட்டு வருகின்றது.*


*கடந்த எட்டு ஆண்டுகளாக தான் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமி தொடர்ந்து சூடாகி வருகின்றது.*


*பனியோடைகள் உருகுவதாலும், கடல் வெப்பம்-அடைவதாலும் கடலின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.*


*இயற்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும். ஆசியாவிலும் ,ஐரோப்பாவிலும் வானிலை சீர்குலைவினால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.*



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.