நெடுந்தீவில் ஒரு வீட்டில் இருந்த நால்வர் வெட்டிக்கொலை !


நெடுந்தீவில் ஒரு வீட்டில் இருந்த நால்வர் வெட்டிக்கொலை ! ஒருவர் ஆபத்தான் நிலையில் மீட்பு.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றின் இன்று காலை ஐந்து பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.


3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்து அங்கு தங்கியிருந்தவர்கள் என்றும் அவர்கள் உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


கொலைக்கான காரணம் என்றும் சந்தேகநபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.