அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறுஅறித்தல் வரை தொடரும்


கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.


இந்த நிலையில், துக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.