சஜித்தை பிரதமராக்க ஜனாதிபதி இணக்கம்!!

 


திர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க க தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

அந்த சந்திப்பின்போது இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிமார், சிறுகட்சிகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஆனால் நீங்கள் அதனை செய்கின்றீர்கள். எனவே, உங்களுக்கு ஆதரவு வழங்குவோம் கூறியுள்ளனர்.

அபோது தனித்தனியே ஆதரவு வழங்குவதைவிட, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்துக்கொண்டு எனது வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குங்கள். எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு எதிர்காலத்தில் பிரதமர் பதவியைக்கூட வழங்க தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இதனையடுத்து ஜனாதிபதி ரணில் கூறிய விடயம் தொடர்பில் சஜித்திடம், மனோ, ஹக்கீம் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.