புகையிரத கடவையில் ஆணொருவரின் சடலம்!!
மட்டக்களப்பு புகையிரத நிலைய புகையிரத கடவையில் இருந்து ஆணொருவரின் சடலம் புத்தாண்டு தினமான இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த ராசநாயகம் ரமேஸ்குமார் (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு பயணித்த ரயிலில் அல்லது இன்று அதிகாலை பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேக வெளியிட்ட பொலிஸார்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை