யாழில். நடிகர் திலகத்தின் மகன்!

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் வெளியீடும்,  பட்டிமன்றமும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காகவே சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் யாழ்பாணம் வந்துள்ளார்.

சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலினை முனைவர் மருதமோகன் மேற்கொண்டு குறித்த நூலினை இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெளியீடு செய்து வைக்கவுள்ளனர்.

அத்துடன் சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா? அல்லது உடல் மொழியா? என்ற தலைப்பிலான பட்டிமன்றம் ஒன்றும் இடம் பெறவுள்ளது.

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறும் பட்டிமன்றத்தில் கரூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களான வடிவேலு, சுதா தேவி, சுசிலா சாமி அப்பன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜீவா ரஜிகுமார் ஆகியோர் பேசவுள்ளனர்.

நடிகர் திலகத்தின் மகனின் வருகையினை வரவேற்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்ரம் பிரபு நற்பணி மன்றத்தை சேர்ந்த தலைவர் மாலை, பொன்னாலை அணிவித்து பலாலி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தொடர்ந்து நாளை மறுதினம்  திங்கட்கிழமை  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் நன்கொடை வழங்கப்பட்ட மூளாய் வைத்தியசாலையினைப் பார்வையிடுவதற்கு  நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.