யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது!

 


யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.