பேஸ்புக் காதலை நம்பி போன 15 வயது சிறுமியின் பெண்ணுறுப்பில் பியர் போத்தலை நுழைத்து சித்திரவதை செய்த கொடூரம்

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி, முகநூல் மூலம் இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.


இருவரும் ஒருமுறை கூட சந்தித்திருக்காத நிலையில், காதலனுடன் சேர்ந்த வாழ விரும்பிய சிறுமி, தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளார்.


சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற பேஸ்புக் காதலன், சிறுமியுடன் உடலுறவு கொள்ள விரும்பினார். 


எனினும், சிறுமி அதற்கு உடன்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பேஸ்புக் காதலன், சிறுமியை தாக்கி கொடூரமான பாலியல் வதை புரிந்துள்ளார்.


வெற்று பியர் போத்தலை சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து, கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக அப்படியே வைத்திருந்துள்ளார்.

இதுதவிர, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளார்.


இதன்போது சிறுமியின் மூக்கிலிருந்து இரத்தம் வந்துள்ளது.

பொலிஸ் 119 அவசர அழைப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட அறிவித்தலின் பேரில் கதிர்காமம் பொலிஸ் குழு சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.