தமிழரசு கட்சியின் 2ம் நிலையினரின் பாலியல் துர்நடத்தைகள்! 


வலி வடக்கு பிரதேச சபையின் முன்னைநாள் (தற்போது கலைந்த சபை) தவிசாளர் சுகிர்தனது வீட்டின்முன் அரச உத்தியோகத்தராக அதே பிரதேச சபையில் கடமையாற்றும் பெண்ணொருவர் பெற்றோல் ஊற்றி எரிந்து பிறரால் அணைக்கப்பட்ட பின்னர் கிணற்றினுள் பாய்ந்தும் தற்கொலைக்கு முயன்றதாகவும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள்(?) தெரிவிக்கின்றன! 


உயிரிழந்தவர் 36 வயதுடையவர் என்பதனால் சுயமாக முடிவெடுத்து நல்லது கெட்டதை அறிந்துநடக்கும் அதேவேளை தன்னளவில் முடிவெடுக்கும் அத்தனை தகுதியும் உடையவர். மேலதிக தகமையாக ஓர் அரச உத்தியோகத்தராகவும் இருந்துள்ளார். 


தற்கொலை செய்துகொண்டவரை இழிவுபடுத்தும் நோக்கமோ, அரசியல்வாதி என்ற பக்கத்தை தாண்டி தனிமனிதனான சுகிர்தனை இழிவுபடுத்தும் நோக்கமோ எம்மிடம் இல்லை என்பதனை முன்னரேயே கூறி விடயதானத்தினுள் செல்வோம்.


இலங்கை தமிழரசு கட்சிக்கு இது புதிய விடயமும் இல்லை. ஆனால் தொடர் நாடகமாக அதே கட்சியினுள் இவ்வாறான விடயங்கள் அம்பலமாவது வாடிக்கையாகி வருகிறது. தென்மராட்சியில் சயந்தன் பாடசாலை மாணவி என்று எண்ணி #கோபி_கோபிகா என்ற பேக் ஐடியுடன் கடலைபோட்டு சல்லாபிக்க முயன்றமை அம்பலமாகியபோது அக்கட்சியினது தலைமை பொதுவாழ்வில் தனிமனித ஒழுக்கம் முதன்மையானதென நடவடிக்கை எடுத்திருப்பின் கட்சியிலுள்ளோர் சற்றேனும் நிதானித்திருப்பர். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. குறித்த விடயத்தை அம்பலப்படுத்தியதாக கருதப்படும் அலுவலகம் ஒன்றை அடியாட்களை வைத்து தாக்கிய காட்டுமிராண்டித்தனமே அரங்கேறியது. 


பின்னர், கிளிநொச்சியில் வேழன், அண்மைகாலங்களில் மதமாற்ற பேர்வழிகள் மக்களின் இயலாமைக்கு உதவுவதாக நடித்து தமது நோக்கை நிறைவேற்றுவதுபோல், சிறையில் இருக்கும் குறித்தபெண்ணின் கணவனை விடுவிக்க உதவுவதற்கு தன் உடல் இச்சையை தீர்க்க சந்தர்பம் தேடியமை, (இதன்போதான #கொத்துரொட்டி கதை உலகறிந்தது) அப்பட்டமாக அப்பெண்ணால் அம்பலப்படுத்தப்பட்டிருந்தபோதும் தமிழரது கட்சி எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மாறாக அப்பெண்ணை தமது அதிகாரத்தை பயன்படுத்தி பழிவாங்கியமையே நிகழ்ந்தது. 


இவ்வாறு நிகழும் சம்பவங்களில் மருதனார் மடத்திற்கு சிங்கள விபச்சாரியை அழைத்துவந்து சல்லாபித்து விபச்சாரிக்கு பணம்கொடுக்காது ஏமாற்ற முற்பட்டு விடயம் ஊரறிய வெளிவந்தமை யாவரும் அறிந்தமையே! 


அவ்வரலாற்று தொடர்ச்சியில், நேற்று சுகிர்தன் வீட்டில் குறித்த பெண் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் மரணமாகியுள்ள விடயம் அரங்கேறி உள்ளது ஊரறிய..... குறித்த பெண் கற்பவதி என்றும் அரசல்புரசலாக செய்திகள் தெரிவிக்கின்றபோதும் உறுதிப்படுத்த முடியவில்லை! 


தமிழரசு கட்சியில் வளர்க்கப்பட்டுவரும் 2ம் கட்ட தலைவர்களது தறிகெட்ட பாலியல் லீலைகள் எதனை காட்டுகிறது என்பதனை எமது மக்கள் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.


தொடரும்......

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.