அன்னை பூபதி அம்மா அவர்களின்  35ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!!


அன்னைபூபதி அம்மா எம் மண்ணிலே இந்தியவல்லாதிக்கத்துக்கு எதிராக தீயாக நின்றவா.


தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது.


இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது.அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள்.இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாகதியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதி அம்மாவின் அறப்போர் அமைந்தது.


அகவணக்கம் தாயே .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.