யாழ். அச்சுவேலி பகுதியில் அரச உத்தியோகத்தர் எனக்கூறி பணமோசடி!!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி வளலாய் பகுதியில் தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணொருவரிடம் சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாகவும் அதற்காக இருபதாயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து பண மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மோசடி எனத் தெரிந்த போதும் தன்னுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பணம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அயலவர்களிம் விபரம் தெரிவிக்க முனைந்த போது, தொலைபேசியும் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இவ்விடயம் குறித்து அச்சுவேலி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான ஒரு விடயம் நீர்வேலி பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை