அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனாள்ட் ரம் கைதின் பின்னர் விடுவிப்பு!!


தேர்தல் நிதியை ஆபாச பட நடிகைக்கு வழங்கிய குற்றச்சட்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றப்பத்திரிகை செவ்வாயன்று நியூயோர்க் நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


அத்துடன் முன்னாள் குடியரசுக் கட்சித் தலைவருக்கு எதிரான 34 குற்றங்களும் வெளிப்படுத்தப்பட்டன.


 இதன் மூலம் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வரலாற்றின் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரை ட்ரம்ப் பெற்றார்.


ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து அவருக்கு பணம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


 மென்ஹாட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது.

இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார்.


தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது.


 இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோவர் மென்ஹட்டன் நீதிமன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தார் ட்ரம்ப்.


நீதிமன்றத்திற்கு வெளியே நின்று இருந்த ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.


 சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த ட்ரம்ப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


 நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக, புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு விரைந்த ட்ரம்ப், அங்கே தனது ஆதரவாளர்களிடையே இந்த வழக்கு நாட்டிற்கே பெரும் அவமானம் என்று கூறினார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.