வவுனியாவில் மக்களின் ஆபத்தான பயணம்!!

 


வவுனியா நகரில் இருந்து தினசரி செட்டிகுளம் செல்லும் பயணிகள் பேருந்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தின் வெளிப்புறத்திலும் பயணிகள் தொங்கிக் கொண்டு உயிராபத்தான பயணத்தை தினசரி மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் தனியார் வேலைவாய்ப்புக்கள், சந்தை நடவடிக்கைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அரச வேலை என தினமும் பலரும் வவுனியா நகருக்கு வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு வந்து செல்பவர்கள் மாலை வேளை நகரில் இருந்து செட்டிகுளம் நோக்கி திரும்பும் போது பேருந்தில் தமது உயிரை கையில் பிடித்தபடி பயணிப்பதாக கூறப்படுகின்றது.

பேருந்தில் தொங்கிய படியும், அதன் பின்பகுதி, மேற்பகுதி என  உயிராபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு போதியளவிலான பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்ப்பட வேண்டும் என பயணிகளின் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.