தென்மராட்சியில் இடம்பெற்ற மெகா பிறீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள்!!

 


தென்மராட்சி மெகா பிறீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள்  நேற்று (சனிக்கிழமை 15/4/23) தென்மட்டுவில்  வளர்மதி விளையாட்டு அரங்க மைதானத்தில் மிகச் சிறப்பாக  ஆரம்பமானது.


தென்மராட்சி மெகா பிறீமியர் லீக்கீன் தலைவர் சஜிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக ஆர்வலர் செல்லையா பாலேந்திரா அவர்கள்  கலந்து சிறப்பித்தார்.


 சனி , ஞாயிறு தினங்களில் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. 

இப்போட்டிகள் 3 வது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன் இந்த போட்டித் தொடருக்கு  சமூக ஆர்வமுடைய பல வியாபார நிறுவனங்கள் நிதி அணுசரணை வழங்குவது குறிப்பிடத்தக்கது  .

நேற்றைய போட்டிகளில் ஜொலித்த தென்மராடசியின் இளம் வீர்ர்களுக்கு  ஐவின்ஸ் தமிழின் வாழத்துக்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.