போலி பொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 


யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அண்மையில் உருத்திராக்கப் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அவை போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிலங்கையில் காணப்படுகின்ற நில் வெரழு (Blue Olive) என அழைக்கப்படும் பழங்கள் உருத்திராக்க பழங்களை போலுள்ளதால் அதனை ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கை வர்த்தகர்கள் உள்ளூர் வியாபாரிகளைப் பயன்படுத்தி இவற்றை விற்பனை செய்ததாகவும்   உருத்திராட்சம் மரம் இமயமலை சாரலில் தான் வளரும் எனவும்  இலங்கையில் உருத்திராட்சை மரம் இருப்பதாக இன்று வரையும் பதிவு இல்லை என்றும் கூறப்படுகிறது.

 மக்கள் போலி வியாபாரிகள் தொடர்பில் மிக அவதானமாகச் செயல்படுமாறு கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.