பால் மா பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 


சிங்களப் புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


இந்த சோதனையின் போது, ​​ *விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார் 2,000 கிலோ பால் மா அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*


அத்துடன், 80 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான பால் மா பொருட்கள், காலாவதியான இனிப்புப் பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொருட்களுடன் களஞ்சியசாலையின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


*கொழும்பு, மோதரை பொலிஸ் பிரிவில் பெர்குசன் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றிலேயே, காலாவதியான பால் மா பாவனைக்குத் தகுதியற்றதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.*


விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.