!12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!!


12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, புத்தளம், குருநாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, 


களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.


ஏனைய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலைப்பாங்கான பகுதிகளிலும் சரிவுகளிலும் உள்ள வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மின்னல், மண்சரிவு போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ஆலோசனைகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், 


அவசர உதவிகளுக்காக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.