வாட்ஸ்அப் இல் வந்துள்ள மற்றுமொரு வசதி!!.


நார்மல் காலில் மட்டுமே Call Notificationல் ரிப்ளை செய்யும் வசதி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் Call notification ல் ரிப்ளை செய்யும் வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம் அவ்வப்போது பயனாளர்களுக்காக பல அப்டேட்களை வழங்கி வருகிறது. 


இந்நிலையில், தற்போது whatsapp நிறுவனம் Call தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, நார்மல் கால் போலவே whatsappல் யாராவது உங்களுக்கு call மூலமாக தொடர்பு கொள்ளும்போது அந்த காலை அட்டென்ட் செய்ய முடியவில்லை எனில், எதற்காக காலை அட்டென்ட் செய்ய முடியவில்லை என அந்த காலிலேயே ரிப்ளை செய்து கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.


அதாவது, பயனாளர் ஒருவர் உங்களுக்கு whatsapp மூலமாக தொடர்பு கொள்ளும் போது ”decline”, “reply” என்கிற ஆப்ஷன் உங்களுக்கு காட்டப்படுகிறது. 


ரிப்ளை என்கிற ஆப்ஷனை நீங்கள் அழுத்தும் பொழுது அந்தக் கால் கட் செய்யப்பட்டு நேரடியாக உங்களது மெசேஜ் பக்கத்திற்கு செல்கிறது. 


மேலும் இந்த ரிப்ளை பட்டன் மூலமாக எதற்காக அந்த காலை அட்டென்ட் செய்ய முடியவில்லை என்கிற காரணத்தை அந்த கால் செய்பவர்களுக்கு உடனடியாகவே தெரிவிக்க முடியும். தற்போது இந்த புதிய அப்டேட் சில மெட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 


கூடிய விரைவில் அனைத்து whatsapp பயனாளர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.