கிராமமும் நகரமும்!!

 


என்னல இது?.... உண்மையை புட்டு புட்டு வச்ச மாதிரி இருக்கு 


 . வெற்றிலை பாக்கு போட்டால் அது கிராமம்

• பீடா போட்டால் அது நகரம்


• பச்சை குத்தினால் கிராமம்

• டாட்டூ போட்டு கொண்டால் நகரம்


• மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

• மெஹந்தி போட்டா நகரம்


• மஞ்சள் தண்ணி ஊத்தி கொண்டாடினா கிராமம்

• Chemical பொடி தூவி ஹோலின்னா  நகரம்


• கையில் மஞ்சப் பை வைத்திருந்தால் கிராமம்

• பாலித்தீன் பை வைத்திருந்தால் நகரம்


• கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

• மனைவி அவள் நண்பா்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் நகரம்


• கிழிந்த ஆடையை துவைத்துப்  போட்டால் கிராமம்

• நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்


• உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

• உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்


• கோடு போட்ட அண்டர் வேர் கிராமம்

• இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் நகரம்..


• நாய் வீட்டை காவல் காத்தால் அது கிராமம்

. நாயை வீட்டில் வைத்து காவல் காத்தால் அது நகரம்.


நன்றி -  முகநூல்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.