கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

 


அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில்   தனது நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்து வெளிநாடு செல்வதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


சம்பவத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே  கொல்லப்பட்டார். விசாரணையில் குத்தி கொலைசெய்த நபர் வெளிநாடு செல்ல இருந்ததான தகவலையடுத்து பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அறிவித்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற  கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது மது அருந்தியுள்ளனர் இதன்போது அவர்களுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் கோபத்திற்கு  சென்றதை அடுத்து  இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.