2009- இலிருந்து மக்கள் போராட்ட மன நிலையிலிருந்து சிறிது சிறிதாக விலக்கிக்கொண்டு அல்லது அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?


2009- இலிருந்து மக்கள் போராட்ட மன நிலையிலிருந்து சிறிது சிறிதாக விலக்கிக்கொண்டு அல்லது அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

இதற்கு காரணமாக பலர் நினைப்பது என்னவென்றால், எதிரிகளே திட்டமிட்டு  இவ்வாறு நகர்த்துகிறார்கள் என்பதாகும். ஆனால் உண்மை என்னவெனில்; அதற்கு நமது இன்றைய சமூகமும், மக்களுமே துணைபோகிறார்கள். இது உண்மையின் மிகச்சிறிய பகுதியென்றே நினைக்கிறேன். போராட்ட காலத்தில் எதிரியின் செயல் இன்றைவிட  நூறு மடங்கு அதிகமானது, அபொழுதெல்லாம் வீழாத மக்கள் இன்று ஏன் விழவேண்டும் ? இந்த வீழ்ச்சிக்கான உளவியல் காரணங்கள் என்ன, அவற்றிற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வதுதான் இப்பகுதியின் நோக்கம். 


 நமது சிந்தனையில் இருக்கும் ஒரு மாபெரும் பிழை என்பது, அனைத்தையும் யாரோ திட்டமிட்டு  செய்கிறார்கள் என்று நினைப்பதுதான்.  யாருமே திட்டமிடாமல்  மனித உளவியல்  அவர்களை தன்னிச்சையாக  இயக்கலாம். மனித மூளையின் சிந்தனையை இரண்டாகப் பிரிக்கலாம்: புலப்படும்  சிந்தனை (conscious), புலப்படாத  சிந்தனை (Unconscious).  புலப்படும் சிந்தனை என்பது, நாம் எவ்வாறு  செயல்படுகிறோம் , எவ்வாறு சிந்திக்கிறோம் என்று நமக்கு புலப்படும்.  இதுதான் அன்றாடம் நாம் கூறும் பகுத்தறிவு, விழிப்புநிலை என்பது.  புலப்படாத சிந்தனை என்பது ஆழ்மனதில் தோன்றி உணர்வுகளின் மூலம்  நம்மை இயக்கும்.  ஒரு செயல்பாட்டிற்கான உண்மைக் காரணங்கள் நமக்குத் தெரியாது, அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாது. உதாரணமாக ஒருவர் காமவெறி பிடித்து தவறான பாதையில் செல்கிறார்  என்றால், அவரால் அவருக்கு  ஏன் அந்த உணர்வுகள் வந்தன என்று அறியவும் முடியாது, அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அவர் செய்வது தவறு என்று தெரிந்தாலும், தனது செயலை மாற்றமுடியாமல் அல்லல்படுவார்.  


  புலப்படாத சிந்தனைகள் என்பது அரசியலில் இருந்து, தனிமனித அன்றாட வாழ்வுவரை அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. மனிதனின் செயற்பாடுகளில் 95% இவ்வாறான புலப்படாத சிந்தனைகளாலேயே ஏற்படுகின்றனன. புலப்படும் சிந்தனைகள் நமக்குத் தெரிவதால், அதுதான் நமது அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானிக்கிறது என தவறான முடிவுக்கு வருகிறோம். உளவியல் என்ற படிப்பின் ஒரு அடிப்படை  நோக்கமே இந்த புலப்படாத சிந்தனைகளை நமக்கு புலப்பட வைப்பதுதான். 


"வீரநாயகன்" உளவியல் என்பதும்  புலப்படாத சிந்தனையின் செயல்பாடே. தலைவரை வீரநாயகனாகப் பார்த்தவர்களின் செயற்பாடும், ஒரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போன்ற தன்மையுடையதே. அதை பகுத்தறிவால் விளக்கமுடியாதது. அந்த  உணர்வில் இருந்தவர்களுக்கு,  இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.


- கலாநிதி சேது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.