ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் நீரில் மூழ்கி சடலமாக மீட்ப்பு!

 ⭕ *LOCAL NEWS* 


மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் குறித்த விருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 05.30 மணியலவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மத்துரட்ட கெட்டயாபத்தனை கிராமத்தில் வசித்த டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர  (வயது 12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் சடலம் சம்பவ தினம் இரவு 09.30 மணியலவில் மீட்க்கப்பட்டுள்து.


அதேநேரம் நீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்றுமாலை சடலமாக மீட்கபபட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக  ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த மத்துரட்ட பொலிஸார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.