ரயில் கடவையை கடக்க முற்பட்ட மகிழூந்து சரக்கு ரயிலில் மோதி விபத்து.

 


ஹப்புத்தளையில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட மகிழூந்து சரக்கு ரயிலில் மோதி விபத்து.


ஹப்புத்தளை நகரில் மகிழூந்து ஒன்று இன்று மதியம் 12.45 மணியளவில் தொடரூந்து கடவையை கடக்க முற்பட்ட வேளையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானது.


மொனராகலை பகுதியில் இருந்து ஹப்புத்தளை பகுதிக்கு உறவினர் வீடொன்றுக்கு சென்று மீண்டும் மொனராகலை செல்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் மகிழூந்தில் பயணத்தை ஆரம்பித்து ஹப்புத்தளை நகர் பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த சரக்கு ரயிலில் மகிழூந்து மோதி விபத்துக்குள்ளானது. 


மகிழூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை ரயில் கடவைக்கு அருகில் காவலில் இருக்கும் காவலாளி அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இல்லாமையே இவ்விபத்துக்கான காரணம் என ஹப்புத்தலை பொலிஸார் தெரிவித்தனர் .

காவலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.


மேலதிக விபரங்களை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்ராமு தனராஜா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.