தமிழினத்தின் சீற்றம் என்றும் அடங்காது !

 


இதுவும் கடந்து போவோம்

எதுவும் இங்கு மறப்பதற்கில்லை

உதவும் உலகம் என்றிருந்தோம் 

அதுவும் எம்மைக் கைவிட்டதே!


உற்றார் உறவினர் நண்பரை இழந்தோம்

நற்றார் போற்றும் தலைவனையும் இழந்தோம் 

பற்றோடு வாழ்ந்த மண் இழந்தோம் 

முற்றோடு எம் உணர்வு இழந்தோம்!


குற்றம் இல்லாப் பாலகனைக் கூடக் கொன்றார் 

சுற்றம் எல்லாம் கூடி வேடிக்கை பார்த்து நின்றார் 

காலக் கொடுமையால் நாம் பிரிந்தாலும் 

ஞாலங் கடந்தும் எதையுமே மறவோம்!


ஏற்றம் கொண்ட தமிழினத்தின் 

சீற்றம் என்றும் அடங்காது 

மாற்றம் ஓர் நாள் பெற்றிடுவோம்

கொற்றம் அடைந்தே தீர்ந்திடுவோம்!


-நிலாதமிழ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.