தலைமகன் - தனிநீதி - தனிநாடு


தமிழுக்கு உயிராய்

தரணிக்கு அரணாய்
தழைத்த எம்பிரானே
தாயுமானவனே.
உயிரிடை தோய்ந்தவன்
உலையிடை வெந்தவன்
உறுபகை அறுத்தவன்
விடுதலை உணர்வதை
எம்மிடை விதைத்தவன்.
வல்லையின் முகவரி
வழி வழி தெரிந்திட
வித்தைகள் பலப்பல
விளைவித்த பெரும்படை
நினைவதை நித்தமும்
நம்மிடை சேர்த்தவன்.
போரிடை வென்றவனே - எம்
புழுதிநிலம் காத்தவனே!
ஆண்டவரின் பெருநிலமும் அனலிடையே வேகுதே
மாண்டவரின் சான்றுகளும்
புதையுண்டே போகுதே
மீண்டவரின் மனச்சாட்சி
தினம்தினமும் சாகுதே
ஈண்டவரின் மனுநீதி
இனவழிப்பாய் ஆகுதே.
இனவழிப்பில் எமையழித்த
ஈனர்களை இனங்கண்டு
தூக்கிலிடு ஐநாவே.
இனவழிப்பில் முகமிழந்த
தமிழினத்தின் தனிநிலத்தை
தூக்கிவிடு ஐநாவே.
அகிலமும் உரைக்கின்ற
உந்தன் பரிகார நீதியினால்
தமிழ்நிலத்தை தனிநாடாய்
ஆக்கிவிடு ஐநாவே.
-:நடராஜர் காண்டீபன் :

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.