மக்களுக்காக தனியொருவனாக என்றாலும் போராட்ட களத்தில்!

 


இந்த ஒற்றை மனிதனுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் எல்லாமுமே இருக்கிறது. ஆனாலும், அதையெல்லாம் புறந்தள்ளி, மக்களுக்காக தனியொருவனாக என்றாலும் போராட்ட களத்தில் அசராமல் நிற்கிறான்…

ஓய்வின்றி போராட்டமே வாழ்க்கையாகிப்போன ஒரு மனிதன், அசதியில் தரையில் சாய்ந்தாலும் அதை விமர்சித்து இன்பம் காண்பவர்களுக்குமாக சேர்த்தே அவன் களத்தில் நிற்கிறான் என்ற புரிதல், தாய்மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கும்…

இன்று இவனின் ஒற்றை போராட்டத்தின் தார்மீகமும், வலிமையும், தேவையும், இன்று இவனை இகழ்பவர்களின் வாசல்களில் புத்தர் குந்துவது தடுக்கப்படும்போதாவது புரியட்டும்…

குகன் யோகராஜா

Kugan Yogarajah

23.05.2023

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.