ஜேர்மன் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

 


ஜேர்மனியில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, முன்னணி குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.

ஜேர்மன் குழந்தைகள் நல மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான The Association of Youth Medicine (DGKJ) என்னும் அமைப்பு, ஜேர்மனியில் பெனிசிலின் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், குழந்தைகளுக்கான வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்த பிரச்சினைக்கு உடனடியாக வேகமான, நம்பத்தகுந்த மற்றும் நீடித்த தீர்வு காணவேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஐரோப்பா முழுவதும் நிலவும் இந்த மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக நமது குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளின் நலனுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளார்கள் அவர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.