கனடாவில் வனத்தின் மத்தியில் உச்சி குளிர்ந்த சிவன்!!


யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நண்பர் சந்திரன் இராசலிங்கம் அவர்கள் கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில்  கிராமம் ஒன்றில் காணி வாங்கி, அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து, நேற்று சித்திரை வளர்மதி கழுவாய் நாளன்று சிவலிங்கம் ஒன்றை நந்தியெம்பெருமானுடன் திருநிலைப்படுத்தியுள்ளார். 


கடல் கடந்தாலும் சென்ற இடமெல்லாம் சைவத்தினையும் தமிழினையும் பரப்பும் தமிழர்கள் . இப்படி சிவவழிபாடுகள் எல்லா இடங்களிலும் பெருகவேண்டும். மக்கள் தங்கள் பண்பாட்டின் பெருமைகளை உணரவேண்டும். சைவவழி நின்று, தங்கள் குழந்தைகளையும் சைவத்தின் வழி சீர்படுத்தி, தமிழர் மரபுகளை காத்து வாழ்வதே நிறைவான வாழ்க்கை.


மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.