குப்பி அழுகிறது!


தோழனே தோழியே

 நான் விரும்பிய வீரரே

 எங்கே சென்றீர்கள்?

 எப்போ வருவீர்கள்?

 உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.

 நீங்கள் சென்ற வழி பார்த்து பூத்திருக்கிறேன்.

 காலங்கள் நீண்டு செல்கின்றன

 தமிழர்கள் பாதை மாறி போகின்றனர்

 நீங்கள் அற்ற இந்த வானம்

 நீங்கள் அற்ற இந்த நிலம்

 வேர்கள் அற்ற மரங்களாகி இருக்கின்றன

 நீங்களற்ற காலம்

நீண்டு சென்றதனால்

 இப்போதெல்லாமிங்கே

 காவாலிகளும் கஞ்சாக்களும் பெருகிவிட்டன

 அரசியலும் அரை பைத்தியங்களும் மலிந்துவிட்டன.

 இவைகளைப் பார்த்து

தினம் நான் அழுகிறேன்- குப்பி 

தனிமையில் வாடுகிறேன்

 என்னுயிர் தோழனே

 என்னுயிர் தோழியே

 உங்கள் கழுத்தில் வாழ்ந்தவரை

 நான் பெருமைப்பெற்றேன்

 உங்களோடு வாழ்ந்தவரை நான்

 வலிமை பெற்றேன்

 நீங்களற்ற வாழ்வில்

 எனக்குப் பெருமைகள் இல்லை

 நான் பெற்ற பிறவிப் பயன்

 உங்கள் களுத்தில் வாழ்ந்ததே

 புலிகளே என் உயிர்களே

 விலைமதிப்பற்ற வீரர்களே

 வாருங்கள் தொடர்ந்து போராடுவோம்

 உங்களுக்காகக் நான் காத்திருக்கிறேன்

 மறுபடியும் உங்கள் கழுத்தில் மாலையாக பூத்திருக்கிறேன்

 வெல்லப் போகும் தமிழீழ விடுதலைப் போரில்

 என் பணி சிறப்பாகவே தொடரும் நம்புங்கள்.

 உங்களோடு சேர்ந்து நானும் நடப்பேன்

 வாருங்கள் புலிகளே

 தமிழீழம் மீட்போம்

 தமிழர் வரலாற்றை காப்போம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.